இந்தியாவின் உற்பத்தி மற்றும் உள்கட்டமைப்பு துறைகளில் முதலீடு செய்ய சர்வதேச முதலீட்டாளர்கள் முன்வர வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி அழைப்பு விடுத்துள்ளார்.
சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் காணொலி காட்சி மூலம் பேசிய அவர், கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான துணிச்சலான போராட்டத்தின் மூலம் இந்தியாவின் உண்மையான வலிமையை உலகம் கண்டுள்ளதாக குறிப்பிட்டார்.
இந்தியா தர்சார்பு அடைய வேண்டும் என்பது வெறும் தொலைநோக்குப் பார்வை மட்டுமல்ல, சிறப்பாக திட்டமிடப்பட்ட பொருளாதர யுக்தி என்று பிரதமர் கூறினார்.
நமது தொழில்கள் மற்றும் திறன்மிக்க பணியாளர்களை கொண்டு, இந்தியாவை சர்வதேச உற்பத்தி மையமாக மாற்றுவதே அதன் நோக்கம் என்றும் மோடி தெரிவித்தார்.