காஷ்மீர் விவகாரத்தை இந்தியாவும் - பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று சீனா தெரிவித்துள்ளது.
ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியான கில்ஜிட்-பல்திஸ்தானுக்கு மாகாண அந்தஸ்தை பாகிஸ்தான் வழங்கி இருக்கிறது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.
பாகிஸ்தானின் நடவடிக்கையும், அதற்கு இந்தியாவின் எதிர்வினையும் குறித்து சீன வெளியுறவு செய்தி தொடர்பாளர் வாங் வென்பினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர்,‘காஷ்மீர் பிரச்சனையில் சீனாவின் நிலைப்பாடு நிலையாகவும், தெளிவாகவும் உள்ளது என்றார். இந்த பிரச்சனையை அமைதியாகவும், இருதரப்பு ஒப்பந்தங்கள் அடிப்படையில் பேசி தீர்க்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.