ரிபப்ளிக் டிவி தலைமை செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியின் கைது, ஊடக சுதந்திரத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என பாஜக தெரிவித்த கருத்துக்கு சிவசேனா கண்டனம் தெரிவித்துள்ளது.
விளம்பரம் நிறுவனம் நடத்திவந்த அன்வாய் நாயக்கையும், அவரது தாயாரையும் தற்கொலைக்கு தூண்டியதாக 2018ல் பதிவான வழக்கில், அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டார்.
இதற்கு கண்டனம் தெரிவித்த பாஜக தலைவர்கள், இந்த கைது நடவடிக்கைகள் எமர்ஜென்சி காலகட்டத்தை நினைவூட்டுவதாக தெரிவித்திருந்தனர்.
இதற்கு பதிலளித்த சிவசேனா, பாஜக ஆளும் உத்தரபிரதேசத்தில் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டபோது எமெர்ஜென்சி நினைவுக்கு வரவில்லையா? என கேள்வி எழுப்பியுள்ளது.