உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் பட்டப்பகலில் கத்தியைக் காட்டி மிரட்டி, பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்துச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
தள்ளுவண்டி கடையில் பழங்களை வாங்கிக் கொண்டிருந்த பெண் அணிந்திருந்த செயினை, அருகிலிருந்த நபர் திடீரென பறித்துக்கொண்டு ஓடியுள்ளான்.
செயின் கீழே விழுந்ததால் மீண்டும் தனது கூட்டாளியுடன் வந்த அந்த நபர், கத்தியைக் காட்டி மிரட்டியதில் அந்த பெண் நிலை தடுமாறி கீழே விழ, செயினை எடுத்துக் கொண்டு கொள்ளையர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.