மேம்படுத்தப்பட்ட பினாகா ஏவுகணை சோதனையை, இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளது.
முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணைகள், ஒடிசா கடற்கரையின் சண்டிப்பூரின் ஏவுதளத்திலிருந்து சோதித்து பார்க்கப்பட்டது. மொத்தம் ஆறு பினாகா ஏவுகணைகள் சோதிக்கப்பட்ட நிலையில், அனைத்து ஏவுகணைகளும் வெற்றிகரமாக குறிப்பிட்ட இலக்கை தாக்கி அழித்தன.
சோதனையை தொடர்ந்து இந்த ஏவுகணைகளை ராணுவத்தில் சேர்ப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என டிஆர்டிஓ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.