தகவல் தொழில்நுட்பத் துறையில் நியமனங்கள் தொடர்பாக கேரள முதலமைச்சரின் கூடுதல் தனிச் செயலாளர் ரவீந்திரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
தங்கக் கடத்தல் வழக்கை விசாரிக்கும் போது, வேறு சில திட்டங்களிலும் முறைகேடுகள் மற்றும் கமிஷன்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கரனிடம் விசாரிக்கப்பட்டதின் அடிப்படையில் கூடுதல் தனிச் செயலாளர் ரவீந்தரனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மாநிலத்திற்குள் வழக்கு பதிவு செய்து விசாரிக்க சிபிஐக்கு வழங்கப்பட்ட ஒப்புதலை கேரள அரசு ரத்து செய்த நாளில் இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.