ஆந்திர மாநிலத்தில் பள்ளிகள் திறந்து 3 நாட்களில் 180 ஆசிரியர்களுக்கும் 10 மாணவர்களுக்கும் கொரோனா உறுதியாகி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் கடந்த 2ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு 9,10ஆம் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டு 3 நாள்களில் சித்தூர் மாவட்டத்தில் 125 ஆசிரியர்கள், 3 மாணவர்கள் என ஆந்திராவில் ஒட்டு மொத்தமாக 180 ஆசிரியர்களுக்கும், 10 மாணவர்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து அனைத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது.
பள்ளிகள் திறக்கப்பட்ட சில நாட்களிலேயே மாணவர்கள், ஆசிரியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது ஆந்திர மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.