பாசுமதி அரிசிக்கு புவிசார் குறியீடு வழங்கும் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் வழக்குத் தொடுக்க முயன்று வருகிறது.
பாசுமதி அரிசிக்கு புவிசார் குறியீடு வழங்கக் கேட்டு இந்தியா சார்பில் 2018ல் விண்ணப்பிக்கப்பட்டது. இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள ஆவணத்தில், பாசுமதி அரிசி இந்தியாவில் குறிப்பிட்ட இடத்தில் விளைவதாக குறிப்பிட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள பாகிஸ்தான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடிவெடுத்தது. இதற்குப் பதிலளித்துள்ள இந்தியா, இந்த அரிசி இந்திய வம்சாவளியைச் சேர்ந்தது என்று ஒருபோதும் கூறவில்லை எனத் தெரிவித்துள்ளது.