பெண்கள் பாதுகாப்புக்காக எந்த சட்டமும் கொண்டுவர மத்திய அரசு தயார் என்று மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி கூறியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற பெண்கள் பாதுகாப்பு தொடர்பான மாநாட்டில் பேசிய அவர், பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கும், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கும் பெண்கள் பாதுகாப்பை விட முக்கியமான விஷயம் வேறு எதுவும் இல்லை என்றார்.
கடந்த 6 ஆண்டுகால அரசின் சாதனைகளை பார்த்தாலே இதை தெரிந்து கொள்ளலாம் என்ற அவர், பெண்கள் பாதுகாப்புக்காக எந்த சட்டம் கொண்டுவரவும், உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கவும் மத்திய அரசு தயார் என்றார்.
கடந்த 2018-ம் ஆண்டு, குற்றவியல் திருத்த சட்டம் கொண்டு வந்ததை சுட்டிக்காட்டிய அவர், அதில், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனைகள் கடுமை ஆக்கப்பட்டன என்றார்.