லடாக் உள்ளிட்ட உயரமான இடங்களில் பணிபுரியும் வீரர்களுக்காக கிரபீன் மூலம் தயாரிக்கப்பட்ட ஆடைகள், நவீன டிரோன்களை தயாரித்து வழங்க 20க்கும் மேற்பட்ட நிறுவனங்களை சீனா ராணுவம் தேர்வு செய்துள்ளது.
கார்பனின் மேம்பட்ட வடிவமான கிரபீன் மூலம் தயாரிக்கப்பட்ட ஆடைகள் நீர்புகா தன்மை கொண்டது என்பதுடன், நெருப்பினாலும் பாதிப்பு அடையாது.
லடாக், திபெத் போன்ற அதிக குளிர் நிறைந்த பிரதேசங்களில் பணிபுரியும் ராணுவ வீரர்களுக்கு அந்த உடைகளை தயாரித்து வழங்க சீனா ஏற்பாடு செய்துள்ளது.
அதேபோன்று எல்லைப் பகுதியில் கண்காணிப்பு மற்றும் சரக்குகளை கொண்டு செல்வது போன்ற பணிகளுக்காக நவீன டிரோன்களை தயாரித்து வழங்கவும் சில நிறுவனங்களுடன் சீனா ஒப்பந்தம் செய்துள்ளதாக செய்தி வெளியாகி இருக்கிறது.