இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் கடற்படைகள் இணைந்து மேற்கொள்ளும், மலபார் கடற்படை கூட்டுப் பயிற்சி இன்று தொடங்குகிறது.
நான்கு நாட்கள் நடைபெறும் பயிற்சியின் முதல் கட்டம், விசாகப்பட்டினத்தில் வங்கக்கடல் கடற்கரைப் பகுதியில் நடைபெறுகிறது.
நீர்மூழ்கிக் கப்பல்களைத் தாக்கி அழிப்பது, வான் வழியில் நடத்தப்படும் தாக்குதல்களை கப்பலில் இருந்து எதிர்கொள்வது உள்ளிட்ட நவீன பயிற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
சீனாவிற்கு எதிராக ஒற்றைக் கருத்துக்களை கொண்ட, க்வாட் அமைப்பைச் சேர்ந்த நான்கு நாடுகளும் இந்த கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுகின்றன.