நடப்பு ஆண்டில் நாட்டில் கடுமையான குளிர்காலம் நிலவும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது.
இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், டெல்லியில் கடந்த மாதம் இரவு நேர வெப்பநிலை சராசரியாக 17.2 டிகிரி செல்சியசாக பதிவாகியதாக கூறப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் இருந்து வீசும் குளிர்ந்த காற்றினால் வட மகாராஷ்டிராவின் சில பகுதிகளில் வெப்பநிலையை இயல்பை விட குறைவாக உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் லா நினா தாக்கம் காரணமாக நடப்பு ஆண்டின் குளிர்காலம் கடுமையாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தின் நிர்வாக இயக்குநர் கூறியுள்ளார்.