குஜராத் மாநிலத்தில் பேசிய பிரதமர் மோடி, பாரதியாரின் பாடல் வரிகளை மேற்கோள் காட்டி உள்ளார்.
நர்மதா மாவட்டத்தின் கெவாடியாவில் நடைபெற்ற தேசிய ஒற்றுமை தின நிகழ்ச்சியில் பேசிய அவர், பாரதியாரின் மன்னும் இமயமலை எங்கள் மலையே, மாநிலம் மேல் இது போல் பிறிது இல்லையே என்ற பாடலின் முதல் 8 வரிகளை தமிழிலேயே கூறினார்.
பின்னர் இந்த பாடல் வரிகளுக்கான அர்த்தத்தை அவர் இந்தியிலும் மொழி பெயர்ந்து கூறினார். உலகின் மிக பழமையான மொழியான தமிழில் நாட்டை புகழ்ந்து பாரதி எழுதி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதே போன்று சுதந்திர தின உரையிலும் பாரதியின் வரிகளை பிரதமர் மோடி மேற்கோள் காட்டியது குறிப்பிடத்தக்கது.