புல்வாமா தாக்குதல் தொடர்பான அனைத்து சர்ச்சைகளையும் குற்றச்சாட்டுகளையும் பொறுமையுடன் சகித்துக் கொண்டதாகவும், தற்போது உண்மை வெளிவந்திருப்பதாகவும் மோடி கூறினார்.
புல்வாமா தாக்குதலுக்கு அண்டை நாடு அதன் நாடாளுமன்றத்திலேயே பொறுப்பேற்றுக் கொண்டு விட்டதாகக் குறிப்பிட்ட பிரதமர், புல்வாமா தாக்குதலால் துயரமான வேளையை நாடு சந்தித்துக் கொண்டிருந்தபோது, அசிங்கமான அரசியல் செய்தவர்களின் உண்மை முகம் அம்பலமாகியிருப்பதாக தெரிவித்தார்.
இந்தியாவுக்கு எதிரான சக்திகளுக்கு பகடைக் காயாக பயன்படும் இத்தகைய கட்சிகளால், நாட்டுக்கு மட்டுமல்ல சம்மந்தப்பட்ட கட்சிக்கும் கூட எந்த பயனும் இல்லை என பிரதமர் சாடினார்.