பிரதமர் மோடி தமது சுதந்திர தின உரையில் அறிவித்தபடி 6 லட்சம் கிராமங்களில் ஃபைபர் இணைய வசதியை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் இறுதிக்கட்டத்தில் உள்ளதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
பீகாரில் சுமார் 46 ஆயிரம் கிராமங்களில் இணைய இணைப்பை கடந்த செப்டம்பர் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து சுமார் 27 ஆயிரம் கிராமங்களுக்கான பணிகள் நவம்பர் மாதத்தில் நிறைவடையும் என்றும் இன்னும் 6 மாதங்களில் ஒவ்வொரு கிராமத்துக்கும் வைஃபை வசதி கிடைத்துவிடும் என்றும் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்