ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சரும், தேசிய மாநாட்டு கட்சித் தலைவருமான பரூக் அப்துல்லா வெளியே செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில், மீண்டும் அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து பேசிய அக்கட்சியின் நிர்வாகி, மிலாது நபியை முன்னிட்டு ஹஸ்ரத்பால் மசூதிக்கு தொழுகை நடத்த பரூக் அப்துல்லா புறப்பட்டதாகவும், ஆனால், அவரை வீட்டை விட்டு வெளியே செல்ல விடாமல் போலீசார் தடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இது, அவரை மீண்டும் வீட்டுக்காவலில் வைக்கும் முயற்சியாக தெரிவதாகவும் அவர் குறிப்பிட்டார்.