மத்தியப் பிரதேசத்தின் 28 தொகுதிகளுக்கு நவம்பர் 3ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி பாஜகவினர் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.
காங்கிரசில் இருந்து விலகிய ஜோதிர் ஆதித்ய சிந்தியா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமாவை அடுத்து அத்தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது.
28 இடங்களுக்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலுக்காக முதலமைச்சர் சிவராஜ் சவுகான், பாஜக மூத்த தலைவர் உமா பாரதி உள்ளிட்டோர் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.