மும்பையில் மின்சார ரயில்களை இயக்குவது தொடர்பாக மகாராஷ்டிர அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே முரண்பாடு வலுத்து வருகிறது. இதனால் மின்சார ரயில்களை நம்பியுள்ள சுமார் 60 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சாதாரண மக்களும் பயணிக்க அனுமதிக்குமாறு கோரி மத்திய அரசுக்கு சிவசேனா அரசு கடிதம் எழுதியது. ஆனால் இன்னும் ரயில்வே நிர்வாகம் அதற்கு அனுமதியளிக்கவில்லை. கூட்ட நெரிசலைத் தவிர்க்க சாதாரண மக்கள் பயணிக்கும் நேரத்தையும் மாற்றி நிர்ணயிக்க மாநில அரசு பரிந்துரை செய்துள்ளது. ஆனால் இதில் மத்திய அரசுக்கு உடன்பாடு ஏற்படவில்லை.