மத்திய அரசு அறிவித்த வட்டிக்கு வட்டி சலுகை, பயிர் மற்றும் டிராக்டர் கடன்களுக்கு பொருந்தாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய நிதியமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில், கொரோனா ஊரடங்கு காலத்தில் வேளாண் கடன் திட்டத்தின் கீழ் பயிர், டிராக்டர் கடன் பெற்றவர்கள், விவசாயக் கடன் பெற்றவர்கள் வட்டிக்கு வட்டி சலுகைக்கு தகுதியான 8 பிரிவுகளின் கீழ் வர மாட்டார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
அதே நேரம், பிப்ரவரி 29ம் தேதியை கணக்கிட்டு, அன்றைய தினத்தில் இருந்து கிரெடிட் கார்டு நிலுவைத் தொகை வைத்திருப்பவர்களுக்கு வட்டி வட்டி ரத்து சலுகை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது