மிசோரம் மாநிலத்தை சேர்ந்த 4 வயது சிறுமி, தனது மழலை குரலில் பாடிய வந்தே மாதரம் பாடல் பலரையும் கவர்ந்து உள்ளது.
எஸ்தர் நம்தே என்ற அந்த சிறுமி பாடிய பாடலை மிசோரம் மாநில முதலமைச்சர் சோரம் தங்கா தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து புகழாரம் சூட்டியுள்ளார்.
63 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பின்தொடரும் தனது யுடியூப் பக்கத்தில் சிறுமி பகிர்ந்த வீடியோவை, இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்துள்ளனர்.