மத்திய அரசு 1 லட்சம் டன் வெங்காயத்தை விற்பனைக்கு விடுவிப்பதாக மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் கூறியுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டம் தரம்புரி நகரில் நடந்த கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,வெங்காய விலை உயர்வை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.
வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்து, இறக்குமதிக்கான வழிகளையும் அரசு திறந்து விட்டுள்ளதாக அவர் கூறினார்.மேலும் கையிருப்பில் இருந்து 1 லட்சம் டன் வெங்காயத்தை மத்திய அரசு ‘நபெட்’ என்னும் இந்தியாவின் தேசிய கூட்டுறவு சந்தைப்படுத்தல் சம்மேளனம் மூலம் விடுவிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.