கப்பல்களை தாக்கி அழிக்கும் ஏவுகணையை இந்திய கடற்படை மீண்டும் வெற்றிகரமாக பரிசோதித்து உள்ளது. வங்காள விரிகுடா கடலில் நடைபெற்ற இந்த பரிசோதனையின் போது, இந்திய கடற்படையை சேர்ந்த ஐ.என்.எஸ். கோரா கப்பலில் இருந்து ஏவுகணை ஏவப்பட்டது.
ஏவுகணை நிர்ணயிக்கப்பட்ட தூரத்தில் நிறுத்தப்பட்டிருந்த பழைய கப்பல் ஒன்றை மிக சரியாக தாக்கி அழித்ததாக கடற்படை தெரிவித்துள்ளது.
கடந்த 23 ஆம் தேதி அன்று அரபிக்கடலில் நிறுத்தப்பட்டிருந்த ஐ.என்.எஸ்.பிரபால் கப்பலில் இருந்து இதே போன்று கப்பல்களை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இப்போது அடுத்த 7 நாட்களுக்கும் வங்காள விரிகுடா கடலில் அதே சோதனையை இந்திய கடற்படை வெற்றிகரமாக நடத்தி உள்ளது.