இந்திய பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட வேகமாக மீண்டு வருவதாகவும், 2024-ம் ஆண்டுக்குள் ரூ.350 லட்சம் கோடியை எட்டும் எனவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இகனாமிக் டைம்ஸ் நாளிதழுக்குக்கு பேட்டி அளித்த அவர், கொரோனா நெருக்கடி, பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்ள அரசுக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தது என்றார். எதிர்பார்த்ததைவிட வேகமாக பொருளாதாரம் மீண்டு வருவதாகவும், ஆகஸ்டு-செப்டம்பர் மாத தரவுகள் அவற்றை உறுதி செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இரண்டாம் உலகப்போருக்குப்பிறகு புதிய உலகம் கட்டமைக்கப்பட்டதுபோல, கொரோனாவுக்குப்பிறகும் அதுபோன்றதொரு சூழல் ஏற்படும் என்ற பிரதமர், இந்தமுறை உற்பத்தி பஸ்சை இந்தியாதான் ஓட்டும், உலகளாவிய வினியோக சங்கிலியையும் ஒருங்கிணைக்கும் என்றார். தொடர் சீர்திருத்தங்கள் மூலம் 2024-ம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை நாடு எட்டுமென மோடி தெரிவித்தார்.