25 ஆயிரம் டன் வெங்காயத்தையும், 30 ஆயிரம் டன் உருளைக் கிழங்கையும் அரசு இறக்குமதி செய்ய இருப்பதாக மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையிலும், தட்டுப்பாடு இன்றி சந்தையில் கிடைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
ஏற்கனவே சுமார் 7 ஆயிரம் டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுள்ள நிலையில், வரும் தீபாவளிக்கு முன்னதாக 25 ஆயிரம் டன் வெங்காயம் இந்தியா வந்து சேரும் என்று எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.
பூடானில் இருந்து 30 ஆயிரம் டன் உருளைக் கிழங்கை இறக்குமதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பியூஷ் கோயல் தெரிவித்தார்.