கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் மகன் பினீஷ் கொடியேறி, போதை மருந்து கும்பலுக்கு நிதி அளித்ததாகவும், பினாமி பெயரில் போதை மருந்து கடத்தலில் ஈடுபட்டதாகவும் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
கேரள தங்க கடத்தலில் ஹவாலா பண பரிமாற்றம் குறித்து நடந்த விசாரணையில் சிக்கிய அனூப் முகம்மது என்பவர் அளித்த தகவலின் பேரில் பினீஷ் கொடியேறி கைது செய்யப்பட்டார்.
அவர் மீது விரைவில் போதை மருந்து கடத்தல் பிரிவுகளில் வழக்கு பதிவாகும் என கூறப்படுகிறது.