ரஷ்ய தடுப்பூசியான ஸ்புட்னிக்-5 இந்தியாவில் சோதித்துப் பார்க்கப்பட்டு வரும் நிலையில், அந்த சோதனைகளில் பிரபல முன்னணி மருந்து நிறுவனமான டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ்-ம் இணைந்துள்ளது.
இந்தியாவில் நடக்கும் ஸ்புட்னிக்-5 மருத்துவ பரிசோதனைகள் குறித்து டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ் ஆலோசனை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக மத்திய உயிரி தொழில்நுட்பத்துறையுடனும், உயிரி தொழில்நுட்ப தொழில் ஆராய்ச்சி உதவி கவுன்சிலுடனும் இணைந்து செயல்பட உள்ளதாக டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ் அறிவித்துள்ளது.