வெங்காய விதை ஏற்றுமதிக்கு தடை விதித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் டுவிட்டரில், பிரதமர் மோடி வெங்காய விதை ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் நாட்டில் தற்போது காணப்படும் வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.