கிழக்கு லடாக்கில் கடும் குளிரை தாக்குப்பிடிக்கும் வகையில் ராணுவ வீரர்களுக்கு புதிய தொழில்நுட்ப உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சீன பாதுகாப்பு அமைச்சகத்தின் காணொலி மாநாட்டில் பேசிய ராணுவ அதிகாரி வு குவான் என்பவர், கிழக்கு லடாக்கில் நிலவும் மைனஸ் 40 டிகிரி குளிரைத் தாக்கும் வகையிலும், உடல் வெப்பநிலையை 15 டிகிரி வரையிலும் வைப்பதற்கான தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
உணவுப் பொருட்களை வழங்குவதற்காக ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்படும் என்றும் வு குவான் கூறியுள்ளார்