இந்தியப் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்கொள்ளும் விதமாக, மாலத்தீவில் அமெரிக்க தூதரகம் திறக்கப்படும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் போம்பியோ தெரிவித்துள்ளார்.
இந்தியா, இலங்கை பயணத்திற்குப் பின் மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா ஷகீத்தை சந்தித்துப் பேசிய பாம்பியோ இதனை தெரிவித்தார்.
இந்த அறிவிப்பு வரலாற்று சிறப்பு மிக்கது என்று வரவேற்பு தெரிவித்துள்ள அமைச்சர் அப்துல்லா, இரு நாடுகளுக்கும் இடையே புதிய பாலத்தை இது உருவாக்கும் என்று குறிப்பிட்டார். மாலத்தீவில் கார்பன் வெளியேற்றத்தை மேலும் குறைக்க அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து செயல்பட இருப்பதாகவும் அவர் கூறினார்.