2021-26 காலகட்டத்திற்கான ஐந்தாண்டு அறிக்கை இம்மாத இறுதிக்குள் தாக்கல் செய்யப்படும் என்று 15-வது நிதிக் குழு தெரிவித்துள்ளது.
குழுவின் உறுப்பினர்களுடனும், முன்னாள் தலைவர்கள் சி. ரங்கராஜன், விஜய் கேல்கர் ஆகியோருடனும் நிதிக்குழுவின் தலைவரான என்.கே.சிங் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
கொரோனா காலத்து பாதிப்புகளை கருத்தில் கொண்டு நிதித்துறையில் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து இந்த அறிக்கையில் அரசுக்கு நிபுணர்கள் பரிந்துரை செய்ய உள்ளனர்.