குருநானக் ஜெயந்தி வரும் 31ம் தேதி கொண்டாடப்படும் நிலையில், சீக்கியர்களின் புனிதத் தலங்களுக்கு செல்ல பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது.
குருநானக் பிறப்பிடமாக கருதப்படும் நான்கனா சாகிப் தவிர, கர்த்தார்புர் சாகிப் குருதுவாரா போன்ற புனிதத் தலங்களுக்குச் செல்ல அனுமதியில்லை என்றும், கொரோனா பரவல் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
கடந்த பத்து நாட்களாக இந்தியாவில் இருந்து பாத யாத்திரை செல்லும் 4 ஆயிரம் சீக்கிய பக்தர்கள் இதனால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்