தெலுங்கானா மாநிலம் மகபூப் நகர் பகுதியில் தாசில்தாரராக உள்ள பால்ராஜூ நாகராஜ் என்பவரிடமிருந்து ஏற்கனவே ஒருகோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் நேற்று கூடுதலாக 36 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அவர் ஒரு தொழிலதிபரிடம் சுமார் ஒரு கோடி ரூபாய் லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக சிக்கினார். அவரது வங்கி லாக்கரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 27 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் 17 லட்சம் ரூபாய் மதிப்புடை வெள்ளி நாணயங்களை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
இந்நிலையில் மேலும் 36 லட்சம் ரூபாய் ரொக்கப்பணமும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது .