மாநிலத்தில் ஆன்லைன் விளையாட்டு மற்றும் சூதாட்ட வலைதளங்களை தடை செய்ய வலியுறுத்தி, ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தொலைதொடர்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு அவர் எழுதிய கடிதத்தில், ஆந்திராவில் ஆன்லைன் சூதாட்ட வலைதளங்களை தடை செய்ய இணைய சேவை வழங்குனர்களுக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
ஆன்லைன் சூதாட்டத்தால் அதிகரிக்கும் குற்றங்களை தடுக்க, மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என ஜெகன் மோகன் குறிப்பிட்டுள்ளார்.