மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதால் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
கடந்த சில வாரங்களாக பீகார் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில், உடல் நல பாதிப்பு ஏற்பட்டதையடுத்து பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது.
இது குறித்து டிவிட்டரில் தெரிவித்த ஸ்மிரிதி இரானி, அண்மையில் தன்னை சந்தித்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.