சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு வருடங்கள் தண்டனை பெற்று சிறையில் உள்ள சுதாகரன், தன்னை 90 நாட்கள் முன்கூட்டியே விடுதலை செய்ய கோரி பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
2001 ஆம் ஆண்டு பெரா வழக்கில் சுதாகரன் கைதுசெய்யப்பட்டு பல மாதங்கள் சிறையில் இருந்துள்ளார். அப்போது சுமார் 90 நாட்கள் சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்காக சுதாகரன் ஆஜராகி உள்ளார்.
இதை மேற்கோள் காட்டி தன்னை 90 நாட்கள் முன்கூட்டியே விடுதலை செய்ய கோரி தற்பொழுது சுதாகரன் சார்பில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவின் மீது இந்த வார இறுதியில் அல்லது அடுத்த வாரத்தில் தீர்ப்பு வழங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே சுதாகரன் செலுத்தவேண்டிய 10 கோடி ரூபாய் அபராதத் தொகையை நீதிமன்றத்தில் இதுவரை செலுத்தவில்லை என்பதை நீதிமன்ற அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.