தேசிய கல்விக் கொள்கையை விரைந்து அமல்படுத்த வேண்டும் என்று நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு மத்திய பல்கலைக்கழக மானியக்குழு (UGC) மீண்டும் கடிதம் எழுதியுள்ளது.
இதுதொடர்பாக அனைத்து பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மற்றும் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,
தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக நவம்பர் 16ம் தேதிக்குள் இணையவழி கருத்தரங்குகளை நடத்த வேண்டுமென கூறப்பட்டுள்ளது.
அதுதொடர்பான விவரத்தை பல்கலைக்கழக மானியக்குழு கண்காணிப்பு அமைப்பின் தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.