கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றி பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பங்கெடுக்கும்படி அந்த மாநில வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பீகார் சட்டப்பேரவையின் 243 தொகுதிகளில் 71 தொகுதிகளுக்கு முதல்கட்டமாக இன்று தேர்தல் நடைபெறுகிறது.
இந்நிலையில் ட்விட்டரில் மோடி வெளியிட்டுள்ள பதிவில், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன், ஜனநாயக திருவிழாவில் பங்கேற்கும்படி அனைத்து வாக்காளர்களையும் வலியுறுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.