செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

மேலும் 3 ரபேல் விமானங்கள்.. நவம்பர் 5இல் இந்தியா வருகை..!

Oct 28, 2020 07:12:19 PM

பிரான்ஸ் நாட்டிலிருந்து நவம்பர் மாதம் 5ம் தேதி மேலும் 3 ரபேல் போர் விமானங்கள் இந்தியா வரவுள்ளன.  

இந்திய விமானப்படையை பலப்படுத்தும் வகையில், பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் ஏவியேசன் நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் விமானங்களை 59 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்க அரசு ஒப்பந்தம் செய்தது.

இதில் டஸால்ட் ஏவியெசன் நிறுவனத்தால் முதல்கட்டமாக ஒப்படைக்கப்பட்ட 5 ரபேல் போர் விமானங்கள், ஹரியானா மாநிலம் அம்பாலா விமானப்படை தளத்தை கடந்த ஜூலை மாதம் வந்தடைந்தன. பின்னர் செப்டம்பர் மாதம் அந்த 5 விமானங்களும் இந்திய விமானப்படையில் முறைப்படி சேர்க்கப்பட்டன.

இந்நிலையில் 2ஆவது கட்டமாக 3 ரபேல் விமானங்கள் நவம்பர் மாதம் 5ம் தேதி பிரான்சிலிருந்து நேராக அம்பாலாவுக்கு வரவுள்ளன.

கடந்த முறை 5 விமானங்கள் வந்தபோது, ஐக்கிய அரபு அமீரகம் நாட்டின் அபுதாபி நகரிலுள்ள விமானப்படைதளத்தில் இடை நிறுத்தம் செய்யப்பட்டன. அதுபோல இல்லாமல் இந்த 3 விமானங்கள், இடை நிறுத்தம் இல்லாமல் நடுவானில் எரிபொருள் நிரப்ப்பப்பட்டு நேராக அம்பாலா வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக, 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் மேலும் 3 விமானங்களும், மார்ச் மாதம் 3 விமானங்களும், ஏப்ரல் மாதம் 7 விமானங்களும் வருகைதரவுள்ளன. இதுபோல ஏப்ரல் மாதத்துக்குள் இந்தியாவுக்கு மேலும் 16 ரபேல் விமானங்கள் வர இருப்பதாக மத்திய அரசு மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே வந்த 5 ரபேல் விமானங்கள், ஏப்ரலுக்குள் வரவுள்ள 16 விமானங்கள் என மொத்தம் 21 ரபேல் விமானங்களில், 18 அம்பாலாவிலுள்ள கோல்டன் ஆரோஸ் விமானப்படை பிரிவில் சேர்க்கப்படுமெனவும், இந்தியாவின் கிழக்கு பகுதியில் சீனாவால் எழுந்துள்ள அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில் எஞ்சிய 3 ரபேல் விமானங்கள் மேற்குவங்கத்திலுள்ள ஹசிமாரா விமானபடைதளத்துக்கு அனுப்பப்படுமெனவும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.


Advertisement
பழங்குடியினர் இடையே மோதலை ஏற்படுத்துவதே காங்கிரஸ் கொள்கை - மோடி
பூட்டிய வீட்டின் தகரகூரையை துளைத்துக் கொண்டு வந்த தோட்டாவை போலீஸில் ஒப்படைப்பு..
சிம் கார்டே இல்லாமல் ஃபோன் பேசும் வசதி : பி.எஸ்.என்.எல் புதிய திட்டம்..
ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் 3ஆவது நாளாக நீடிக்கும் அமளி..
மின்சாரம் பாய்ந்து தூக்கிவீசப்பட்ட தொழிலாளி - மீட்ட சக தொழிலாளர்கள்
பயங்கரவாதத்தை எதிர்கொள்ள விரைவில் தேசிய தீவிரவாத எதிர்ப்புக்கொள்கை கொண்டுவரப்படும் - உள்துறை அமைச்சர் அமித் ஷா
இந்திய கடற்படையின் செயல்பாடுகளை பார்வையிட்ட குடியரசு தலைவர்.!
ஆந்திராவில் சட்டம் ஒழுங்கை நிர்வகிப்பவர் டம்மி உள்துறை அமைச்சர் - ஒய்.எஸ்.ஆர் கட்சி விமர்சனம்..!
உ.பி. அரசு கொண்டு வந்த மதரஸா கல்வி வாரிய சட்டம் செல்லும் - உச்சநீதிமன்றம்
ஜார்கண்ட் மாநில அரசு மாஃபியாக்களின் அடிமையாகிவிட்டது - பிரதமர் மோடி

Advertisement
Posted Nov 08, 2024 in தமிழ்நாடு,Big Stories,

சூரனை வதம் கண்டு அருள் முகம் காட்டிய ஆறுமுகம்

Posted Nov 08, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

“கட்சியை விட்டு விலகிக்கோ அண்ணன பத்தி பேசாத..” தடுத்தவருக்கு கும்மாங்குத்து..! நா.த.கவில் என்ன நடக்கிறது.?

Posted Nov 07, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

“வழக்கறிஞரை முடிச்சிட்டேன்..” அரிவாளுடன் காவல் நிலையம் சென்ற ஆவேச இளைஞர்..! அதிர்ச்சியில் போலீசார் - நடந்தது என்ன ?

Posted Nov 07, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

காவலர் மண்டை உடைப்பு குடிகார புரூஸ்லீக்கு தரமான மாவுக்கட்டு..! கையை தொட்டிலில் போட்டு விட்டனர்..

Posted Nov 06, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

மீண்டும் அதிபராகிறார் டொனால்ட் டிரம்ப்.. கமலாவுக்கு அதிர்ச்சி கொடுத்த அமெரிக்கர்கள்..


Advertisement