பீகார் மாநில சட்டப்பேரவைக்கான முதல் கட்டத் தேர்தல் இன்று நடைபெற உள்ளது.
மொத்தமுள்ள 243 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று 71 தொகுதிகளுக்கு முதற்கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், ஜனதா தளம் மற்றும் பாஜக அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் அடங்கிய மெகா கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இதனிடையே, மறைந்த மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வானின், லோக் ஜனசக்தி கட்சியும் தேர்தல் முடிவுகளை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என கூறப்படுகிறது.