ஆப்கானிஸ்தானில் இருந்து ஒரு லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
கனமழையால் வெங்காய சாகுபதி பாதிக்கப்பட்டதால் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து விலை படிப்படியாக உயர்ந்து கொண்டு வந்தது. குஜராத் போன்ற வெங்காய சாகுபடி செய்யும் மாநிலங்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் தற்போது ஒரு கிலோ வெங்காய விலை 100 ரூபாயை தாண்டியுள்ளது.
இதை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. வணிகர்கள் இருப்பு வைப்பதற்கான கட்டுப்பாடுகளை ஏற்கனவே விதித்திருந்தது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் இருந்து ஒரு லட்சம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.