கேரளாவில், கொரோனா பாதிப்பு தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ள நிலையில், ஆந்திராவில், கணிசமாக குறைந்துள்ளது.
கேரள சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிதாக 5,457 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், கேரளாவின் பாதிப்பு எண்ணிக்கை, 4 லட்சத்தைக் கடந்துள்ளது. இந்நிலையில், ஆந்திராவில், கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்துள்ளது. அங்கு புதிதாக, 2 ஆயிரத்து 901 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.