கொரோனா பாதிப்பால் நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் பூஜ்யம் அல்லது எதிர்மறையாக இருக்கும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் எரிசக்தி தொடர்பான கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசிய அவர், ஊரடங்கு தளர்வு நடவடிக்கை காரணமாக இந்திய பொருளாதாரம் மீண்டு வருவதற்கான அறிகுறிகள் தென்பட தொடங்கி உள்ளது என்றார்.
அடுத்த ஆண்டு உலகில் வேகமாக வளரும் பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார். இந்திய பொருளாதார மீட்சி நிலையானதாக இருக்கும் என்றும், பண்டிகை காலம் அதற்கு தூண்டுகோலாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.