நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஊழல் பெரும் தடையாக இருப்பதாக முப்படை தளபதி பிபின் ராவத் கவலை தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய அவர், நாடு பொருளாதார ரீதியாகவும் அரசியல் மற்றும் சமூக ரீதியாகவும் வளர்ச்சி அடைவதற்கு ஊழல் பெரும் தடையாக உள்ளது என்றார்.
ஊழலை அடியோடு ஒழிக்க அனைத்து தரப்பினரும் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்றும் ராவத் வலியுறுத்தினார்.