ஹத்ராஸ் இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்முறைக்கும் சித்திரவதைக்கும் உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை, அலகாபாத் உயர்நீதிமன்றம் கண்காணிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உத்தரப்பிரதே மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில், 19 வயது தலித் பெண், கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கின் சிபிஐ விசாரணையை நீதிமன்றம் கண்காணிக்கக் கோரிய வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, அலகாபாத் உயர்நீதிமன்றம் கண்காணிக்க உத்தரவிட்டுள்ளது.