இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான 2 பிளஸ் 2 அமைச்சர்கள் மட்டத்திலான முக்கிய பேச்சுவார்த்தைகள் டெல்லிடியில் துவங்கியது.
இந்திய-அமெரிக்க ராணுவ வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் 2பிளஸ் 2 என்ற பெயரில் அழைக்கப்படும் ராணுவ-வெளியுறவு அமைச்சர்கள் அளவிலான பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுகின்றன.
கடந்த 2 ஆண்டுகளில் 3 ஆவது முறையாக டெல்லியில் நடக்கும் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோவும், பாதுகாப்பு அமைச்சர் மார்க் எஸ்பரும் நேற்று டெல்லி வந்தனர்.
பேச்சுவார்த்தைக்காக டெல்லி ஐதராபாத் ஹவுஸ் வந்த அமெரிக்க அமைச்சர்களை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர், வரவேற்றனர்.
இரு தரப்பு உயர்மட்ட அதிகாரிகளுடன் இணைந்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. ஐதராபாத் ஹவுசிற்கு வருவதற்கு முன்னர் மைக் போம்பியோவும், மார்க் எஸ்பரும் டெல்லி போர் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
2 பிளஸ் 2 பேச்சுவார்த்தையின் போது, ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த சாட்டிலைட் தரவுகளை பகிர்ந்து கொள்ளுதல், நவீன ராணுவ தளவாட கொள்முதல் உள்ளிட்ட ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்படும் என கூறப்படுகிறது. அதே போன்று கிழக்கு லடாக்கில் நிலவும் எல்லைப் பதற்றம், தெற்காசியாவில் சீனா செலுத்தும் ஆதிக்கம் உள்ளிட்ட விவகாரங்களும் விவாதிக்கப்படுப்படுகிறது.