உத்தரப்பிரதேசத்தில் பசுவதைத் தடுப்புச் சட்டம் அப்பாவிகளுக்கு எதிராக பயன்படுத்தப்படுவதாக அலகாபாத் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
பசுவதை தடைச்சட்டம் தொடர்பான வழக்கில், கருத்துக்கூறியுள்ள நீதிபதிகள், இதுபோன்ற வழக்குகளில் காவல்துறையினர் சமர்ப்பித்த ஆதாரங்களின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கியதாக தெரிவித்துள்ளனர்.
அப்பாவி நபர்களுக்கு எதிராக இந்த சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது எனக்கூறிய நீதிபதிகள், இறைச்சி மீட்கப்படும்போது பகுப்பாய்வு செய்யப்படாமல் பொதுவாக மாட்டிறைச்சி என குறிப்பிடப்படுவதாகத் தெரிவித்தனர்.