இந்திய ராணுவத் தளபதி எம்.எம்.நரவணே நவம்பர் 4- ஆம் தேதி முதல் 3 நாள்கள் பயணமாக நேபாளத்துக்கு பயணம் மேற்கொள்கிறார் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இருநாட்டு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்தப் பயணம் அமையும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 18ஆயிரம் கிலோ மீட்டர் நீள எல்லையில் நிலவி வரும் முக்கியப் பிரச்னைகள் குறித்தும், நிர்வாக ரீதியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இருநாட்டின் ராணுவ அதிகாரிகளுடனும், உயர்நிலை அதிகாரிகளுடனும் விரிவான பேச்சுவார்த்தை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.