உத்தரப்பிரதேசம் ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கு விசாரணை நீதிமன்றம் நேரடியாகக் கண்காணிக்க வேண்டும் என்ற மனு மீது உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.
இந்த வழக்கின் விசாரணையை உத்தரபிரதேசத்தில் இருந்து டெல்லியில் உள்ள நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்காக ஆஜரான வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
மேலும் ஹத்ராஸ் வழக்கு விசாரணையை நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுமீது தலைமை நீதிபதி எஸ் ஏ பாப்டே, நீதிபதிகள் ஏ எஸ் போபண்ணா மற்றும் வி ராமசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பளிக்க உள்ளது.