தசரா பண்டிகையை முன்னிட்டு தெலங்கானாவில் சுமார் ஒரு கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை கொண்டு அம்மன் அலங்கரிக்கப்பட்டதன் வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.
ஐதராபாத்துக்கு அருகே கட்வாலில் உள்ள வாசவி கன்யகா பரமேஸ்வரி கோயிலில், ரூபாய் நோட்டுக்களால் செய்யப்பட்ட ஓரிகமி பூக்கள் கொண்டு அம்மன் சன்னதி அலங்கரிக்கப்பட்டது.
அலங்காரம் செய்வதற்கு பக்தர்களிடம் இருந்து பணம் பெறப்பட்டு, பூஜைக்கு பிறகு அவர்களிடமே திரும்பி தரப்படும் என்று கோயில் பொருளாளர் ராமு தெரிவித்துள்ளார்.