வெளிநாட்டு சிறார்களை மிரட்டி, அவர்களின் ஆபாச காட்சிகளை திரட்டி, இணையத்தில் வெளியிட்ட சின்னத்திரை நடிகர் ஒருவரை மும்பையில் சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த 10 முதல் 16 வயது வரையிலான சிறார்களின் ஆபாச படங்களை இன்ஸ்டாகிராம் வாயிலாக மிரட்டல் விடுத்தும், ஆசை வார்த்தைகள் கூறியும் இந்த நடிகர் திரட்டியதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
இவ்வாறு திரட்டப்பட்ட சிறார் ஆபாச காட்சிகளை வாட்ஸ்ஆப் வாயிலாக தனது வாடிக்கையாளர்களுக்கு நடிகர் வழங்கியதை கண்டுபிடித்துள்ள சிபிஐ அவனது லாப்டாப் மற்றும் மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர். நடிகர் யார் என்கிற விவரத்தை போலீசார் வெளியிடவில்லை.